குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மதுரை, ஏப்.22: மதுரை மாநகராட்சி, மத்திய மண்டல அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் உதவி ஆணையாளர் (பொ) மனோகரன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கொடுப்பது பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் பாலியல் தொந்தரவு குறித்து தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது. பின்பு பெற்றோருக்கு தகுந்த விழிப்புணர்வு பயிற்சிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் மற்றும் சைல்டு லைன் மூலம் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: