வண்டியூர் கண்மாயை தூர்வாரி தீவு போன்ற அமைப்பு உருவாக்கப்படும் அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை, ஏப்.22: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் ேபாது, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி (திமுக) பேசுகையில், ‘‘மதுரை வண்டியூர் கண்மாயை தூர்வாரி கரைகளில் அகலப்படுத்துவதோடு, சுற்றுலாத்தலமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.இதற்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘மதுரை வண்டியூர் கண்மாயில் தூர்வாரி தரையை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோன்று கண்மாயின் மறுபக்கம் தீவு போன்ற மூன்று அமைப்பு உருவாக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொண்டு, பொழுதுபோக்கு சாதனங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related Stories: