திண்டுக்கல்லில் 72 கிலோ பிளாஸ்டிக் வடிவிலான மிட்டாய்கள் அதிரடி பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை

திண்டுக்கல், ஏப். 22: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் , திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் சிவராமன் பாண்டியன், தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் செல்வன், சந்திரமோகன், மற்றும் முருகன்,  ஆகியோர் கொண்ட குழு திண்டுக்கல் நகர் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மேற்கு ரதவீதி, பெரிய கடை வீதி, தெற்கு ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பொம்மை மிட்டாய் விற்பனை செய்த 12 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், 6 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 9 உணவு மாதிரிகளை சேகரித்த அலுவலர்கள், 72 கிலோ மிட்டாய்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையிலுள்ள மொத்த விற்பனைக் கடையில் 3 டன் பொம்மை மிட்டாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு உணவு மாதிரிகளை சேகரித்த அலுவலர்கள், அதன் பரிசோதனை முடிவு வரும் வரையிலும் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: