மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வெற்றி

திருப்பூர், ஏப்.22: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. நான்கு அணிகள் மட்டும் பங்கேற்றதால், நேரடியாக அரையிறுதி போட்டி நடத்தப்பட்டது. முதல் அரையிறுதி போட்டியில் ஜெகதீசன் மெமோரியல் ஹால் கிளப் அணியை எதிர்த்து விளையாடிய சிக்கண்ணா கல்லூரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு அரையிறுதியில் உடுமலை வித்யாசாகர் கல்லூரி அணி, துரைராஜ் ஹாக்கி கிளப் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இறுதிப்போட்டியில், சிக்கண்ணா அணி, உடுமலை வித்யாசாகர் கல்லுாரி அணியை 4-3 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், பாராட்டு தெரிவித்து, சான்றிதழ் வழங்கினர்.

Related Stories: