×

கலெக்டர் அறிவிப்பு சைமா பவர் டேபிள் சங்கம் இடையே கட்டண உயர்வு பேச்சுவார்த்தை ெதாடர்ந்து இழுபறி

திருப்பூர், ஏப்.22: பவர் டேபிள் கட்டண உயர்வு தொடர்பாக இருதரப்பினரிடையே நேற்று நடந்த கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னலாடை ரகங்களுக்கு தையல் கட்டணம் நிர்ணயிப்பதற்காக திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தினர் (சைமா) மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஏற்கனவே, 7 சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்திருந்த நிலையில், நேற்று 8வது சுற்று பேச்சுவார்த்தை சைமா சங்க அலுவலத்தில் நடைபெற்றது. இதில், சைமா சங்கம் சார்பில், அதன் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் எம்பரர் பொன்னுசாமி, செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி நடராஜ் ஆகியோரும் பவர்டேபிள் சங்கம் சார்பில், தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், உதவி செயலாளர் முருகேசன், உதவி தலைவர் பொன்சங்கர், பொருளாளர் சுந்தரம், செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் பவர்டேபிள் சங்கத்தினர், முதல் ஆண்டு 20 சதவீதம், மற்ற 3 ஆண்டுகளுக்கு தலா 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு சைமா சங்கத்தினர், சங்க உறுப்பினர்களிடம் கலந்து பேசி முடிவு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.

Tags : Saima Power Table Association ,
× RELATED உடுமலை அருகே திடீர் சாலை மறியல்