×

கொடூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு 18 ஊட்டச்சத்து பொருட்கள்: துரை சந்திரசேகர் எம்ஏல்ஏ வழங்கினார்

பொன்னேரி: குறைபாடுகளை நீக்க, குழந்தைகளுக்கு 18  ஊட்டச்சத்து பொருட்கள்  கொண்ட தொகுப்பினை, எம்எல்ஏ துரை சந்திரசேகர்  வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்டது மீஞ்சூர் மற்றும்  சோழவரம் ஒன்றியம். இங்கு உள்ள கிராமப்புறங்களில், ஊட்டச்சத்துகுறைபாடு உள்ள குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட பணியாளர்கள் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். இதில், குழந்தைகளை பேணிகாக்க வேண்டும் என்பதற்காக அவர்களின், குறைபாடுகளை நீக்க குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க அதற்கான நிகழ்ச்சி பொன்னேரி அடுத்த கொடூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டார்.  ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மீஞ்சூர் ஒன்றியத்தில் 211, சோழவரம் ஒன்றியத்தில் 58, என மொத்தம் 269 குழந்தைகளை கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊட்டச்சத்து அடங்கிய  18 பொருள்கள்  கொண்ட  தொகுப்பினை அந்த குழந்தைகளுக்கு வழங்கினார். இதில், மீஞ்சூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா, ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி மகேந்திரன். காங்கிரஸ் நிர்வாகி வில்சன், வினோத் உள்ளிட்ட  பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kodur Village ,Durai Chandrasekhar ,
× RELATED மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை...