சிவகாசி மெப்கோ கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

சிவகாசி, ஏப்.21: சிவகாசி மெப்கோ கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ராமலிங்கம், தாளாளர் டென்சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் முனைவர் அறிவழகன் முன்னிலை வகித்து பேசுகையில், கடந்த காலங்களில் இந்த ஊக்கத்தொகை அல்லது நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் முயற்சி செய்து நன்றாக படித்தால்தான் அனைவரும் இந்த உதவி தொகையை பெற முடியும். இந்த உதவித் தொகை அல்லது மாணவர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையிலும் அவர்களது அறிவாற்றலை திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 343 மாணவர்களுக்கு ரூ.66.25 லட்சம் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை கல்வியில் ஊக்குவிப்பது மட்டுமின்றி விளையாட்டு கலை மற்றும் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது என்றார். முடிவில் கல்லூரி முதல்வரின் தனி செயலர் மாதவன் நன்றி கூறினார்.

Related Stories: