×

ஹைவேவிஸ் அணையில் யானை உலா: மக்கள் பீதி

சின்னமனூர், ஏப். 21: சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ளது ஹைவேவிஸ் பேரூராட்சி. இங்கு ஹைவேவிஸ், மேகமலை, மணலார், மேல் மணலார், வெண்ணியார், மகராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. தேயிலை, ஏலம், காப்பி, மிளகு விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குள்ள வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, வரிப்புலி, காட்டு மாடு உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

வனங்களாலும், வனவிலங்குகளாலும் இப்பகுதி மேகமலை வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனமாக கண்காணிப்பில் இருந்து வருகிறது. இப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி புகுந்து வருகிறது. இதனால் சில நேரங்களில் மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

தற்போது கடந்த 4 மாதங்களாக யானைகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று திடீரென மாலையில் ஹைவேவிஸ் அணைப்பகுதியில் யானை ஒன்று திடீரென தண்ணீர் குடித்து விட்டு அங்கேயே வெகுநேரமாக நின்றிருந்தது. இதனை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ரசித்தாலும், மறுபுறம் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் இப்பகுதியில் வனவிலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Highways Dam ,
× RELATED ஹைவேவிஸ் அணையில் யானை உலா: மக்கள் பீதி