தீ தொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காளையார்கோவில், ஏப்.21: காளையார்கோவில் தனியார் பொறியியல் கல்லூரியில் தீ தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மைக்கேல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கற்பகம் முன்னிலை வகித்தார். சிவகங்கை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் மாவட்ட அலுவலர் சத்தியகீர்த்தி மற்றும் உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன் தலைமை வகித்தனர்.

நிலைய அலுவலர் செங்கோல் ராஜ் சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகளின் செயல்விளக்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தீயின் அவசியம், தீவிபத்து ஏற்பட காரணம், தீ விபத்துக்கான அஜாக்கிரதையின் விபரம், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை, விபத்து காலங்களில் உடனடி மீட்பு நடவடிக்கை ஆகியவற்றின் விபரம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: