போட்டிகளே பக்குவப்படுத்தும் முன்னாள் துணைவேந்தர் பேச்சு

காரைக்குடி, ஏப்.21: காரைக்குடி ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு விழா நடந்தது.

மாணவர்களுக்கு பரிசு, சான்று வழங்கி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், கல்விக்குழு ஆலோசகர் பேராசிரியர் சுப்பையா பேசுகையில், மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் உள்ளன.

அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும். மாணவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பரிசும் பாராட்டும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். போட்டிகளே மாணவர்களை பக்குவப்படுத்தும். பரிசு முக்கியம் தான். ஆனால் பரிசே முக்கியமல்ல. வெற்றி, தோல்வியை ஒரே மாதிரி பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு போட்டிகளிலேயே இந்த மனப்பான்மை வளரும். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். பாடத்தை தாண்டி பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: