அக்னி நட்சத்திர கழு திருவிழா மே 8ல் துவக்கம்

பழநி, ஏப். 21:  பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா 14 நாட்கள் நடைபெறும். சித்திரை மாதம் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதம் முதல் 7 நாட்களும் இவ்விழா நடைபெறும். இவ்விழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தர்கள் பழநி மலையை சுற்றி உள்ள கிரிவீதியில் கிரிவலம் வருவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா வரும் மே மாதம் 8ம் தேதி துவங்கி மே 21ம் தேதி வரை நடைபெறுகிறது. கிரிவலம் வரும் இந்நாட்களில் கிரிவீதிகளில் ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள், கன ரக வாகனங்களை அனுமதிக்க கூடாதென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: