×

பழநி நகராட்சி பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு வீடியோ வைரலானதால் பரபரப்பு

பழநி, ஏப். 21: பழநி நகராட்சியில் கொசு ஒழிப்பு, தூய்மை பணிகளில் பெண்கள் உள்பட பல தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் செய்யும் வேலையை பழநி நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர். இந்நிலையில் பழநி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் ஒப்பந்த பெண் தொழிலாளி ஒருவர், நகராட்சி பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அப்பெண் பேசுகையில், நகராட்சி பணியாளர் தனக்கு மட்டும் அல்லாது பிற பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் வேலை செய்யும் பெண்களை தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் பேசுகிறார். எனவே அவர் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதால் பழநி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நகராட்சி அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்