மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக புகார் இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப் 21: திருப்பூர்  ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவரின் 12 வயது மகள்  திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ஜெய்வாபாய்  மாநகராட்சி பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் மதம் மாற நிர்ப்பந்தம் செய்ததாக  கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின்  பெற்றோர் இந்து முன்னணி ஆதரவோடு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில்  மதமாற்றத்தில் மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.நேற்று இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரியும் ஜெய்வாபாய் பள்ளி அருகே இந்து இளைஞர் முன்னணி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து இளைஞர் முன்னணி மாநில செயலாளர்  செந்தில் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது மாணவியை மதமாற்றம்  செய்ய முயன்ற ஆசிரியையை பணி நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள்  நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

Related Stories: