×

நீலகிரியில் வெயில் வாட்டுவதால் மலை காய்கறிகளுக்கு மைக்ேரா ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்

ஊட்டி, ஏப்.21: நீலகிரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பகல் நேரங்களில் மலை காய்கறி பயிர்களுக்கு அனைத்து பகுதிகளிலும் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடந்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

இச்சமயங்களில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அணைகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், ஆறு மற்றும் நீரோடைகளி்ல தண்ணீர் அதிகமாக காணப்படும். தாழ்வான பகுதிகள் முதல் மலைப்பாங்கான பகுதிகள் வரை மலை காய்கறி விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி காணப்படும். இச்சமயங்களில் அனைத்து பகுதிகளிலும் உள்ள செடி, ெகாடிகள் காய்ந்து விடும். தொடர்ந்து, மே மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

இதனால், மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வது சிரமம். அதேசமயம், தாழ்வான பகுதிகள் மற்றும் சமமான பகுதிகளில் கூட மோட்டார்கள் மூலம் தினமும் தண்ணீர் பாய்ச்சியே விவசாயம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில், கடந்த இரு மாதங்கள் நீலகிரி மாவட்டத்திலும் வெயில் வாட்டியெடுக்கிறது. ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்த போதிலும், பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்தே காணப்படுகிறது.

இதனால், கேரட், பீட்ரூட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மலை காய்கறிகளை பயிரிட்டவர்கள் குட்டைகள் மற்றும் நீரோடைகளில் உள்ள குறைந்த அளவிலான தண்ணீரை எடுத்து மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் பாய்ச்சி வருகின்றனர். குறிப்பாக, பகல் நேரங்களில் வெயில் வாட்டும் நிலையில், பயிர்கள் காய்ந்து விடாமல் இருக்க மைக்ேரா ஸ்பிரிங்கலர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...