அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,ஏப். 21: காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுமதி தலைமை வகித்தார்.

இதில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈ.எல்.சரண்டரைவழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக வரைமுறைப்படுத்த வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் ராக்கி முத்து, செயலாளர் விஜயமனோகரன் மற்றும் திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: