×

குளித்தலை அருகே மணத்தட்டையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க போட்ட சாலையால் இடையூறு

குளித்தலை, ஏப். 21: கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தின் வழியாக தினந்தோறும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் ஏராளமாக சென்று வருகின்றன. திருச்சி கரூர் இடையே ரயில் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாக இருந்து வருகிறது. மேலும் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ரயில்வே கேட் இல்லாத நிலையில் இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்றிய ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட் உள்ள பகுதிகளில் அந்தந்த பகுதி மண்வளம் தகுதிக்கேற்ப குகை வழிப்பாதை சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குளித்தலை அடுத்த மணத்தட்டை பகுதியிலுள்ள ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு தேர்வு செய்து அதற்கான பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக குளித்தலை மணப்பாறை சாலை அருகே உள்ள ரயில்வே கேட்டில் இருந்து ஒருபுறம் மணத்தட்டை பொதுமக்கள் போக்குவரத்திற்கும், மறுபுறம் கட்டுமான பணிக்கு பொருட்கள் ஏற்றிச் செல்ல வாகன வசதி, மறுபுறமும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணத்தட்டை பகுதி பொதுமக்கள் போக்குவரத்திற்காக போடப்பட்ட சாலை சமீபத்தில் பெய்த மழையால் பெரிதும் சேதம் அடைந்து நடந்து செல்ல கூட முடியாத நிலையில் இருந்து வருகிறது.

மேலும் இருசக்கர வாகனங்கள், வாழைக்காய் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணத்தட்டை பொதுமக்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ரயில்வே போக்குவரத்து துறை பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்கள் போக்குவரத்திற்காக போடப்பட்ட சாலை சீரமைத்து தரப்படும். விரைவில் இப்பகுதியில் சுரங்க பாதை அமைப்பதற்கு பொதுமக்கள்் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

Tags : Mandattai ,Kulithalai ,
× RELATED குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்