மாநில தலைவருக்கு எதிராக விமர்சனம் காங். விவசாய அணி மாநில பொதுசெயலாளர் பதவி பறிப்பு

நாகர்கோவில், ஏப்.21: காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், விவசாய அணி மாநில பொதுசெயலாளருமான ராஜன், காங்கிரஸ் மாநில தலைவருக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதோடு, நிர்வாகிகளை நீக்கும் முறை தொடர்பான மாநில தலைமையின் அறிவுரைக்கு எதிராக கேள்வி எழுப்பி சமூக ஊடகங்களில் பதிவிட்டு கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவரது இந்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆகவே மாநில தலைமை ராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணி மாநில பொதுசெயலாளராக இருந்த ராஜன் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவர் இன்று முதல் விவசாய அணியின் மாநில பொதுசெயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். விவசாய அணி நிர்வாகிகள் யாரும் அவரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணி தலைவர் பவன்குமார் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: