×

அம்மையார்குப்பத்தில் சக்தியம்மன் கோயில் மண்டலாபிஷேகம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் சக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று கடந்த 48 நாட்களாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார் குழுவினர் சிறப்பு ஹோம குண்ட பூஜைகள் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க கலசங்கள் புனித நீர் புறப்பாடு நடைபெற்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

மண்டலாபிஷேக பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் உட்பட பெண்கள் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக குழு தலைவர் கணபதி துணைத்தலைவர் நீலகண்டன் செயலாளர் நாராயணசாமி பொருளாளர் கிருபாகரன் துணை செயலாளர் அண்ணாமலை இணை செயலாளர் ஈஸ்வரன் பாண்டியன் உட்பட விழாக்குழுவினர் கிராம பொதுமக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதேபோல், சுப்பிரமணிய சுவாமி கோயில் கிராம தேவதை பொன்னியம்மன் ஆலயம், ராமர் பஜனை மந்திரம் ஆகிய கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் தொடர்ந்து மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

Tags : Sakthiyamman Temple Mandalapisekam ,Ammayarkuppam ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு பிறகு அம்மையார்குப்பத்தில் முழங்கியது சங்கு