ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

விருதுநகர், ஏப். 20: விருதுநகர் நகராட்சி முன்பாக அனைத்துறை ஓய்வூதிய சங்க துணைத்தலைவர் டேவிட் தலைமையில் துணைத்தலைவர் முருகேசன் முன்னிலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் வரும் ஜூன்.30ல் முடிவடைய உள்ளது.குறைகளை களைந்து கட்டணமில்லா மருத்துவத்தை உறுதி செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். 70வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  திருவில்லிபுத்தூரில் வட்ட கிளை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: