×

காளியம்மன் கோயில் திருவிழா

போடி, ஏப். 20:தேனி மாவட்டம், போடியில் பங்குனி, சித்திரை மாதங்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டும். குறிப்பாக சித்திரை மாதத்தில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடக்கும். இந்நிலையில், போடி ஜீவா நகரில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில் கோயிலிலிருந்து பொதுமக்கள் கொட்டகுடி ஆற்றுக்கு சென்று, பூஜைகள் செய்து கரகம் எடுத்தனர்.

பின்னர் விரதம் இருக்கும் பெண்கள் அனைவரும் தண்ணீர் நிரப்பிய குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு, கட்டபொம்மன் சிலை வழியாக வள்ளுவர் சிலை, காமராஜர் பஜார் மற்றும் சாலை வழியாக தேவர் சிலையை கடந்து கோயிலுக்கு வந்தனர். அங்கு மூலஸ்தானத்தில் தண்ணீர் நிரப்பிய குடங்களை வைத்தனர். இதை தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

Tags : Kaliamman Temple Festival ,
× RELATED அதியமான்கோட்டையில் கூழ்பானை விற்பனை ஜோர்