சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர். மேற்கு வங்க சிறுமிகள் திருப்பூரில் மீட்பு

திருப்பூர், ஏப். 20: மேற்கு வங்க மாநிலத்தில் காணாமல் போன இரண்டு சிறுமிகளை திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேற்கு வங்கம் மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் காணமால் போனதாக அறிவித்து அம்மாநில போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த சிறுமிகளின் செல்போன் எண்ணை வைத்து தேடிய போது திருப்பூரில் இருப்பதாக காட்டியுள்ளது.

பின்னர் மேற்குவங்க போலீசார் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் அந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். அவர்களின் நடத்திய விசாரணையில் திருப்பூரில் இருக்கும் தனது காதலனை பார்ப்பதற்காக தனது தோழியுடன் ரயில் மூலம் திருப்பூருக்கு வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த சிறுமிகளை மேற்கு வங்க போலீசாரிடம் ஒப்படைக்க போவதாக திருப்பூர் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: