×

புதுப்பெண் தற்கொலை தென்காசி ஆர்டிஓ விசாரணை

சுரண்டை : சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தில் திருமணமான பத்தே நாளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தைச் சேர்ந்த ராமையா மகள் வெயில்முத்து(18) இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மோகன்ராஜ்(21) என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமண தம்பதியினர் சேர்ந்தமரம் பசும்பொன் நகரில் தனிக்குடித்தனமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மோகன்ராஜ் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வெயில்முத்து திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேர்ந்தமரம் போலீசார், வெயில்முத்து உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வெயில்முத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தென்காசி ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.புளியங்குடி: புளியங்குடி அருகே நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் சிவகுமாரசாமிதுரை(27). நெல்கட்டும் செவல்  நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகள்   சிவா ரம்யா(23). இவர்களுக்கு   கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சிவாரம்யா மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்ஐ பாரத்லிங்கம் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் சாவு குறித்து தென்காசி ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது….

The post புதுப்பெண் தற்கொலை தென்காசி ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : RTO ,Sundai ,Chendamaram ,Churundai ,Tenkasi ,South Kasi RTO ,Dinakaran ,
× RELATED கல்லறை தோட்டத்தில் சடலங்களை புதைக்க...