ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சி

ஈரோடு, ஏப்.20: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு ஆங்கிலத்துறை சார்பாக  தீ தொண்டு வாரம் கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியரல்லா பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர் இரா.வெங்கடாசலம்  தலைமை தாங்கினார். முதல்வர் இரா.சங்கரசுப்பிரமணியன்  முன்னிலை வகித்தார்.

ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி  உத்தரவின் பேரில் ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி  தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சியளித்தனர். முதலுதவி தொடர்பான கேள்விகளுக்கும் தீயணைப்பு துறையினர் பதிலளித்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை ஆங்கிலத்துறைத் தலைவர்  வசந்தகுமாரி மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: