×

மணப்பாறை மாரியம்மன் கோயில் திருவிழா

திருச்சி, ஏப்.20: திருச்சி மாவட்டத்தில் மாரியம்மன் வகையறா திருக்கோவில்களில் முக்கியமானது மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில். ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டுக்கான திருவிழா ஏப்.24ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்குகிறது. மே 18 வரை நடைபெறும் இவ்விழாவில் மே 1 காப்புகட்டுதல், மே 15 பால்குடம் புறப்பாடு, மே 16ல் வேடபரி. மே 18ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும். மணப்பாறை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பால்குடம் நிகழ்ச்சி தான் வெகு விமரிசையாக நடக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாததால் நடப்பாண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வீரமணி, கோவில் செயல் அலுவலர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Manapparai Mariamman Temple Festival ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ