தஞ்சை, ஏப்.20: தஞ்சை அருகே மூதாட்டியை ஏமாற்றி 6 பவுன் தாலிச்செயினை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி பூங்கொடி (63). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள தையல் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் பூங்கொடியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அந்த மர்ம நபர்களின் ஒருவன் இப்படி பாதுகாப்பில்லாமல் தாலிச்செயினை போட்டு செல்லாதீர்கள் என்று கூறி ஒரு பர்சில் வைத்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளான்.