புதுகை திலகர் திடலில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.20: தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிடக்கோரி ஓய்வூதியர்கள் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். 70 வயது முடிவுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Related Stories: