×

வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசு முன்னுரிமை: அமைச்சர் பி.சி.பாட்டீல் தகவல்வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசு முன்னுரிமை: அமைச்சர் பி.சி.பாட்டீல் தகவல்

ஹாவேரி: மாநிலத்தில் புன்செய் வேளாண்மை மற்றும் தரிசு நில மேம்பாட்டிற்காக நில செழிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம் 13 லட்சம் ஹெக்டர் நிலம் பயன் பெற்றுள்ளதாக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார். ஹாவேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த வேளாண் கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது, “மாநிலத்தில் சுவர்ணபூமி திட்டத்தின் கீழ் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் என்ற வகையில் கடந்த நிதியாண்டில் 1.96 லட்சம் விவசாயிகளுக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டுள்ளது. மாநில பட்ஜெட்டில் சில திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மானியம், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவது சகஜமாக நடந்து வருகிறது.  மாநிலத்தில் புன்செய் வேளாண்மை மற்றும் தரிசு நில மேம்பாட்டிற்காக நில செழிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம் 12 லட்சத்து 75 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பலன் பெற்றது. இதை நீர்ப்பாசன பகுதிக்கும் விரிவுப்படுத்தி 25 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன் மூலம் 35 சதவீதம் கூடுதல் உணவு தானியம் உற்பத்தி செய்ய வழி கிடைக்கும். வேளாண் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், உயிரி எரிபொருள் மேம்பாட்டிற்கு நாட்டில் முதல் முறையாக மாநில அரசு தனி கொள்கை வகுத்து செயல்படுத்தி வருகிறது. வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. வரும் 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டிலும் வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும்படி முதல்வர் எடியூரப்பாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன்’’என்றார்….

The post வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசு முன்னுரிமை: அமைச்சர் பி.சி.பாட்டீல் தகவல்வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசு முன்னுரிமை: அமைச்சர் பி.சி.பாட்டீல் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister PC ,Patil Information ,Haveri ,Patil ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில்  காங்கிரஸ் அரசால்...