தா.பழூர் அருகே மகள் மாயம்: தந்தை போலீசில் புகார்

தா.பழூர், ஏப்.20:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது 27 வயது மகள் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு பதிவு செய்துவிட்டு, வங்கிக்கு ெசன்று வருவதாக கூறி தா.பழூர் கடை வீதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் எங்கு தேடியும் கிடைக்காததால் தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: