சீர்காழியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீட்டு முகாம்

சீர்காழி, ஏப்.20: சீர்காழியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. முகாமினை மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மருத்துவர்கள் ஜெயக்குமார், அருண்ராஜ்குமார், ஜான்சிராணி, பூபேஸ் மகேந்திரா, மனநல தினேஷ்குமார், கண் பரிசோதகர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதித்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், வட்டார கல்வி அலுவலர்கள் பொன்.பூங்குழலி நாகராஜன், கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆனந்த், அகிலாண்டேஸ்வரி, சண்முகம், சண்முகவேல், செல்வி, ஞானராஜ் மற்றும் சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை, செம்பனார்கோயில் மற்றும் குத்தாலம் ஒன்றிய இயன்முறை மருத்துவர்கள், சிறப்பாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முகாமில் கலந்துகொண்ட 94 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Related Stories: