மத்திய பல்கலையில் நுழைவு தேர்வை ரத்து செய்ய கோரி 7 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூவினர் ஆர்ப்பாட்டம்

நாகை, ஏப்.20: மத்திய பல்கலைக்கழங்களில் நுழைவு தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பது, மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை அவுரித்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பனர் சுபாஷ்சந்திரபோஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நகரக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், தினேஷ்பாபு, பகத்சிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் திட்டச்சேரியில் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமையிலும், தலைஞாயிறு பகுதியில் வட்ட செயலாளர் ராஜா தலைமையிலும், கீழையூரில் வட்ட செயலாளர் வெங்கட்ராமன் தலைமையிலும், திருப்பூண்டியில் ஒன்றிய செயலாளர் அப்துல்அஜீஸ் தலைமையிலும், கரியாப்பட்டினத்தில் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமையிலும், கீழ்வேளூரில் முன்னாள் எம்எல்ஏ., மாரிமுத்து தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: