×

கரூர் மாநகராட்சியில் மாடி தோட்டம் அமைத்தோர், தூய்மை பணியாளருக்கு பாராட்டு

கரூர், ஏப். 20: கரூர் மாநகராட்சி சார்பில் கரூரில் மாடித்தோட்டம் அமைத்து பராமரிப்பவர்களையும், தூய்மைப் பணியாளர்களையும் பாராட்டு நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி இன்ஜினியர் நக்கீரன், மண்டலத் தலைவர்கள் எஸ்பி கனகராஜ், கா.அன்பரசன், ஆர்.எஸ்.ராஜா , வெங்கமேடு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மேயர் கவிதா கணேசன் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிப்பு செய்பவர்களையும் துப்புரவு பணியாளர்களின் பாராட்டி சான்றிதழ் வழங்கி பரிசு வழங்கி பேசியதாவது. கரூர் மாநகராட்சியை தமிழகத்தின் முதன்மை மாநகராட்சியாக மாற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீடுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து துப்புரவு பணியாளர்கள் கொடுத்தால் பணிகள் சிறப்பாக அமையும். மேலும் கூடுமானவரை பிளாஸ்டிக் பயன்பாடுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல் டீக்கடை உரிமையாளர்களும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

Tags : Karur Corporation ,
× RELATED கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்