×

தாம்பரம் மாநகராட்சி பகுதி கடைகளில் 4 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ.1.12 லட்சம் அபராதம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என, வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் மற்றும் ஆணையர் எம்.இளங்கோவன் ஆகியோர் உத்தரவின்பேரில், சுகாதார அலுவலர்கள் அறிவுச்செல்வம், நாகராஜ், சாமுவேல், சிவகுமார் மற்றும் அதிகாரிகள் தாம்பரம் மார்க்கெட் பகுதி, ராஜாஜி சாலை, குரோம்பேட்டை, ராதா நகர், ஸ்டேஷன் ரோடு, சிஎல்சி ரோடு, ஆர்.பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 4 டன் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.1.12 லட்சம் அபராதம் விதித்தனர்.

Tags : Tambaram ,Corporation ,
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!