கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

தாம்பரம்: தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து  ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. இதை பயன்படுத்தி, பல ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், போக்குவரத்து ஆணையர் மற்றும் சென்னை தெற்கு இணை போக்குவரத்து ஆணையர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, கடந்த 13ம் தேதி இரவு முதல் 18ம் தேதி வரை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில், 2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், கார்த்திக் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 71 ஆம்னி பேருந்துகளில் நடைபெற்ற சோதனையில், சரியான ஆவணம் இல்லாமலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த மற்றும் அதிக பயணிகள் ஏற்றி வந்ததாகவும் 14 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு அபராதமாக ரூ.15,000 வசூலிக்கப்பட்டது.

Related Stories: