பாசன சங்க தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை

திருப்புவனம், ஏப்.19: அச்சங்குளம் கண்மாய் நீரினைப் பயன்படுத்தும் விவசாயிகள் சங்க வாக்காளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புவனம் பகுதியில் 16 கண்மாய் பாசன நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்க தேர்தல் 24ம் தேதி நடக்கவுள்ளது. கடந்த 15ம் தேதி திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அச்சங்குளம் கண்மாய் நீரினை பயன் படுத்தும் விவசாயிகள் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். வல்லாரேந்தல் குரூப்பில் பட்டாதாரர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களில் பலர் தற்போது உயிரோடு இல்லை எனவும் தெரிகிறது. ஆகவே வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சீர் செய்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரையில் அச்சங்குளம் கண்மாய் நீரினைப் பயன்படுத்தும் விவசாய சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: