22ம் தேதி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு

திருப்பூர், ஏப் 19: திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 73 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பும் வகையில் இதற்கு நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேர்முக தேர்வு நேற்று தொடங்கியது. இந்த காலி பணியிடங்களுக்கு 5600 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேர்காணல் வருகிற 22ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இவர்களது விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை சரிபார்க்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழுவிற்கும் உதவி இயக்குனர் ஒருவர் தலைமை தாங்கினர். இந்த தகவலை திருப்பூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன் தெரிவித்தார்.

Related Stories: