×

நீலகிரி மாவட்ட திமுக நகராட்சி,பேரூராட்சி,வார்டு,கிளை தேர்தல் 23ம் தேதி முதல் 28 வரை நடைபெறுகிறது

ஊட்டி,ஏப்.19:  நீலகிரி மாவட்ட திமுக., நகராட்சி,பேரூராட்சி வார்டு கிளை கழக தேர்தல் 23 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட திமுக., செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்ற கழகத்தின் 15வது உட்கட்சி தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஊர்கிளை, உட்கிளை தேர்தலை தொடர்ந்து தற்போது நகராட்சி,பேரூராட்சி வார்டு தேர்தலை தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் சோலூர், பிக்கட்டி, கீழ்குந்தா, கேத்தி, ஜெகதளா, உலிக்கல், அதிகரட்டி, கோத்தகிரி, தேவர்சோலை, ஓவேலி மற்றும் நடுவட்டம் ஆகிய பதினோரு பேரூராட்சிகளிலும் உள்ள வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 20ம் தேதி முதல் மாவட்ட மாவட்ட அலுவலகத்திலும், தொடர்புடைய நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்களிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.  

பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை வரும் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் தலைமை கழக பிரதிநிதி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் அழகிரி சதாசிவம் ஊட்டியில் உள்ள மாவட்ட திமுக., அலுவலகத்தில் பெற்றுக் கொள்வார்கள். நடைபெறும் வார்டு தேர்தல்களில் போட்டியிட விரும்பும் தோழர்கள் கழக சட்டத்திட்ட விதிகளின்படி உரிய கட்டணத்துடன் தலைமை கழக பிரதிநிதி மற்றும் மாவட்ட அலுவலகத்திலும் வேட்புமனுக்களை வழங்கலாம்.28ம் தேதி வரை தேர்தல் நடைமுறைகள் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளிலும் நடைபெறும். விண்ணப்பங்கள் கிடைக்க பெறாத தோழர்கள் நகல் எடுத்தும் வழங்கலாம். இவ்வாறு முபாரக் கூறியுள்ளார்.

Tags : Nilgiris District ,DMK ,Municipal ,
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்