மாடு அறுவைமனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாட்டுடன் வந்து வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கோவை, ஏப். 19:  கோவையில் மாடு அறுவை மனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாட்டுடன் வந்து வியாபாரிகள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாநகர்-மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் இஸ்மாயில் தலைமையில் வந்த 10க்கும் மேற்பட்டவர்கள் மாட்டுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சத்தி ரோடு மற்றும் செட்டிபாளையம் மெயின் ரோட்டில் மாடு அறுவை மனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மனையை ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் எடுத்தவர்கள் அரசு நிர்ணயம் செய்த மாடு அறுவை கட்டணம் ரூ.10 வசூலிக்காமல், சத்தி ரோட்டில் உள்ள அறுவை மனையில் சிறிய காளைக்கு ரூ.150ம், பெரிய காளைக்கு ரூ.500ம் வசூல் செய்கின்றனர். செட்டிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அறுவை மனையில் சிறிய காளைக்கு ரூ. 150ம், பெரிய காளைக்கு ரூ.300ம் வசூலிக்கிறார்கள். இதனால் நாங்கள் நஷ்டத்திற்கு உள்ளாகிறோம். எனவே இந்த அறுவை மனைகளை அரசே எடுத்து நடத்தி  அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: