×

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி ஆர்டிஓ அலுவலகத்தில் 6 நாட்கள் சிறப்பு முகாம்

செங்கல்பட்டு: தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில், முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியை, உரிய ஆவணம் கொடுத்து பெற்று கொள்ளலாம் என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியின் கீழ், சாலை விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர் அல்லது இறந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி விபத்துகளின் தன்மை நிவாரணத்தொகையாக இறப்புக்கு ₹1 லட்சம், நிரந்தர ஊனத்துக்கு ₹50 ஆயிரம், கடுமையான காயங்களுக்கு ₹50 ஆயிரம், 4. ஒரு கண் அல்லது ஒரு மூட்டு, அதாவது ஒரு கை அல்லது ஒரு கால் இழப்புக்கு ₹30 ஆயிரம், 5. மற்ற சிறிய  காயங்களுக்கு ₹10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

எனவே தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும்  சிட்லபாக்கம், மவுன்ட், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டு, அதனால் பாதிப்படைந்தவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் அளிக்கும் மருத்துவச் சான்று.  FIR Copy, Revenue Stamp (3), Ration card, Aadhar Card, Bank Pass Book, Voter Id,  பயனாளரின்  Passport size photo  (2)  ஆகியவற்றுடனும், விபத்தில் உயிரிழந்தால்.  மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்றுகளுடன் 23ம் ேததி வரை தாம்பரம் ஆர்டிஓ அலுவலத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் பாதிக்கப்பட்டவர் அல்லது இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் காலை 10 மணிமுதல் மாலை 5.45 வரை சமர்ப்பித்து, நிவாரண தொகைக்கான காசோலையை  பெற்று கொள்ளலாம்.

Tags : RTO ,Minister’s Accident Relief Fund ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு