கொடியேற்றத்துடன் மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா துவக்கம்

கந்தர்வகோட்டை, ஏப்.19: கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்களூர் ஊராட்சி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று தேர்பவனி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மங்களூர் ஊராட்சியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு திருவிழா நேற்று (18ம் தேதி) மாலை உலகின் ஒளி திருசிலுவை கொடியேற்றி திருவிழா தொடங்கியது. இன்று ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. இந்த திருவிழாவிற்கு பட்டுக்கோட்டை, திருவோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, ஆலங்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் சிலுவை மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஆடம்பர தேர்பவனியை கண்டுகளித்து செல்வார்கள். மேலும் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கந்தர்வகோட்டையில் இருந்து சிறப்பு பேருந்து வசதி செய்து பக்தர்களுக்கு பயன்பெறும் வகையில் போக்குவரத்து துறையினர் செய்துள்ளனர்.

Related Stories: