ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம்

ஜெயங்கொண்டம்,ஏப்.19: பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தீ தொண்டு நாளை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மற்றும் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கும் தீ தடுப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீ தடுப்பு செயல்முறை விளக்கமும், போலி ஒத்திகை பயிற்சியும் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் செய்து காட்டப்பட்டது. தீப்பிடித்த வீட்டில் இருந்து உள்ளே இருப்பவர்களை எவ்வாறு வெளியே கொண்டு வருவது, அவர்களுக்கு எந்த ஆபத்தில்லாமல் மாடியில் இருந்தால் கீழே இறக்குவது, எரிவாயு சிலிண்டரில் தீப்பிடித்தால் எவ்வாறு அனைப்பது, எண்ணெயில் ஏற்பட்ட தீயை எவ்வாறு அனைப்பது போன்றவை பற்றி செயல்முறை விளக்கம் போலி ஒத்திகை நிகழ்ச்சி மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

Related Stories: