×

சத்தீஸ்கர் முதல்வரை சந்திக்க கரும்பு, நெல் உற்பத்தியாளர்கள் பயணம்

அரியலூர், ஏப்.19: கரும்பு,நெல்லை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து வரும் சத்தீஸ்கர் முதல்வரை சந்திக்க கரும்பு மற்றும் நெல் உற்பத்தியாளர்கள் ரயில் மூலம் சத்தீஸ்கருக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர். 2021-22ம்ஆண்டு கரும்பு அரவை பருவத்தில், இந்திய அரசு கரும்பிற்கான சட்டப்பூர்வ விலை டன் ஒன்றுக்கு ரூ.2,755 அறிவித்துள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் பாகல், இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இதுவரை தராத, மாநில அரசின் ஆதரவு விலையாக டன் ஒன்றுக்கு ரூ.795 சேர்த்து ரூ.3,550என அறிவித்து கொள்முதல் செய்கிறது.அதேபோல், மத்திய அரசு நெல் ஒரு குவிண்டால் ரூ.1,940அறிவித்துள்ள நிலையில், ரூ.600 சேர்த்து ரூ.2,540-க்கு சத்தீஸ்கர் முதல்வர் கொள்முதல் செய்து வருகிறார்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர்கள் மற்றும் நெல் உற்பத்தியாளர்கள் அடங்கிய உழவர்கள் குழுவினர் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் தலைமையில் நேற்று சென்றனர். கரும்பு மற்றும் நெல்லுக்கு கூடுதல் விலையை கொடுக்கும் சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், பாராட்டியும் கடந்த மாதம் 24-ம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இனிப்புகளுக்கு மாற்றாக பேரீச்சம் பழங்களும், ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chhattisgarh ,
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...