மயிலாடுதுறை, ஏப்.19: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வஉசியின் 150வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் அரசு பஸ்சில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் கடந்த 1.11.2021 அன்று சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் வஉசி வாழ்க்கையை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நகரும் புகைப்படக்கண்காட்சி மயிலாடுதுறை செயின் பால்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கப்பட்டு தெடர்ந்து மயிலாடுதுறை டிஜிஎன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, டிபிடிஆர் திவான்பகதூர் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முற்பகலில் தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வானாதிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி, தேரிழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கம்பர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டது.