×

புன்னம் சத்திரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

வேலாயுதம்பாளையம், ஏப்.19: புன்னம் சத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே ஈரோடு -கரூர் நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் அடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புன்னம் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் எஸ்ஐ பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Punnam Inn ,
× RELATED புன்னம் சத்திரம் அருகே வீட்டில்...