அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் கிழக்கு கடற்கரை சாலை

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.14: பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சாலையில் செல்லக் கூடிய பெரும்பாலான வாகணங்கள் அதிவேகமாக செல்கின்றன. இந்நிலையில் மனக்குடி பெட்ரோல் பங்க் அருகில் ஒரு இடத்திலும், உப்பூரில் ஒரு இடத்தில் என இரண்டு இடங்களில் சாலை பழுதடைந்து உள்ளது. மற்ற இடங்களில் எல்லாம் சாலை மிகவும் சீராக இருப்பதினால் டூவீலர் மற்றும் ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகண ஓட்டிகள் வாகனங்களை வேகமாக ஓட்டி வருகின்ற நிலையில் சேதமடைந்துள்ளது தெரியாமல் அடிக்கடி விபத்திற்குள்ளாகி கீழே விழுந்து வருகின்றனர்.

எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு பெரும் விபத்துகள் ஏதும் ஏற்பட்டு உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படும் முன்பு, மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: