×

பல அரசியல் பாக்சிங்குகளை பார்த்த பகுதியான கோபாலபுரத்தில் பாக்சிங் அரங்கம் இந்த ஆண்டே அமைத்து தரப்படும்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஆயிரம் விளக்கு எழிலன்(திமுக) பேசுகையில்: கோபாலபுரம் முத்தமிழறிஞர் வாழ்ந்த பகுதி. அது பல அரசியல் பாக்சிங்குகளை பார்த்த பகுதி. அதனால், கோபாலபுரத்தில் ஒரு பாக்சிங் பயிற்சி அகடாமியும், பாக்சிங் அரங்கமும் அமைக்க வேண்டும், என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்: கோபாலபுரம் என்பது ஒட்டுமொத்த உலகத்தை உற்று நோக்கி, முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்ந்த இடமாகும். தமிழக விளையாட்டு துறையை உருவாக்கி தந்தவர் கலைஞர். ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ள கோபாலபுரம் விளையாட்டரங்கில் இந்த ஆண்டே பாக்சிங் அகாடமி  தொடங்கப்படும்.  மேலும் பாளையங்கோட்டையில் விளையாட்டு கிராமத்திற்கான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறும், என பதிலளித்தார்.

Tags : Gopalapuram ,Minister ,Meyyanathan ,
× RELATED ஆவடி அருகே பல கோடி மதிப்புள்ள அரசு...