×

மாநிலத்தில் இயங்கி வரும் உண்டு உறைவிட பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் உறுதி

சித்ரதுர்கா: மாநிலத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உண்டு-உறைவிட பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று சமூகநலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார். இது குறித்து சித்ரதுர்கா மாவட்டம், முளகல்மூரு நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலனுக்காக மாநிலம் முழுவதும் 346 உண்டு-உறைவிட பள்ளிகள் இயங்கி வருகிறது. அதில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் 175 பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளது. மீதியுள்ள 105 பள்ளிகள் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அவைகளில் மாணவர்களுக்கு தேவையான கழிப்பிடம், குளியல் அறை உள்பட வசதிகள் இல்லை என்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அரசிடம் போதிய கட்டிடமில்லாததால் அவசர தேவைக்காக தனியார் கட்டிடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு சில வசதிகள் இல்லை என்பதால், அரசின் சார்பில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு 79 பள்ளிகளுக்கு சொந்த கட்டிடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. மீதியுள்ள பள்ளிகளுக்கும் இன்னும் சில மாதங்களில் சொந்த கட்டிடம் அமைக்கப்படும். உண்டு உறைவிட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்றார்….

The post மாநிலத்தில் இயங்கி வரும் உண்டு உறைவிட பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Chitradurga ,Dinakaran ,
× RELATED போர்க்காலத்தில் பாட்டி நகைகளை...