×

நீலகிரியில் பீட்ரூட் விலை உயர்வு

ஊட்டி, ஏப்.13: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பீட்ரூட் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, வெள்ளை பூண்டு, முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு குறித்த சமயத்தில் பருவமழை ெபய்த நிலையில், அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பல்வேறு காய்கறிகளை பயிரிட்டனர். ஆனால், யாரும் எதிர் பாராத நிலையில், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  

இந்நிலையில், கடந்த வாரம் திடீரென பீட்ரூட் விலை சரிந்தது. கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரையே விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், பீட்ரூட் அறுவடை செய்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டினர். இந்நிலையில், தற்போது பீட்ரூட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், விலை உயர்ந்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் பீட்ரூட் அறுவடையை மீண்டும் விவசாயிகள் துவங்கியுள்ளனர்.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...