அம்மாபேட்டையில் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்

பவானி, ஏப்.13: அம்மாபேட்டை பேரூராட்சிக் கூட்டம் தலைவர் கே.என்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜுலி பெரியநாயகம், செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில், பேரூராட்சிப் பகுதியில் குடியிருப்புகளுக்கு சொத்து வரி, வணிக பயன்பாடு கட்டிடங்கள், காலிமனை வரி உயர்வு குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்துக்கு பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். இதனால், எதிர்ப்பின்றி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: