தி.பூண்டி பிடாரிகுளம் தூர்வாரும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 13: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 19வது வார்டு பிடாரிகுளம் நகரப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் தூர்வாரும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டார். பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். இதில் திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: