பட்டுக்கோட்டை நகராட்சி சிறப்பு கூட்டம்

பட்டுக்கோட்டை,ஏப். 13: பட்டுக்கோட்டை நகராட்சி சிறப்புக் கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா (திமுக) தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுரேஷ், நகராட்சி ஆணையர் சுப்பையா, பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், தமிழக அரசு அறிவுறுத்தலின்படி சொத்துவரி உயர்த்துவது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உடனே நகராட்சி துணை தலைவர் சுரேஷ் (அதிமுக) பேசுகையில், சொத்து வரி உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறினார். உடனே அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் தமாக கவுன்சிலர் ஒருவரும் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவரும் மீண்டும் உள்ளே வந்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: